தமிழகம்

நிலச் சட்டம்: கோவில்பட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சார்பில் கோவில்பட்டி விவசாயிகள் கருப்புத் துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி அருகே கடம்பூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் '' பருத்திக்கு குவிண்டால் ஒன்றுக்கு 7000 ரூபாய் விலை நிர்ணயம் செய்யவேண்டும்.

மோடி அரசு ஏழை, எளிய விவசாயிகளின் நலனைப் புறம் தள்ளிவிட்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. கடந்த நிதியாண்டுக்கான பயிர் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்'' என வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகளில் கைகளில் பருத்தியை ஏந்தியபடி மத்திய அரசுக்கு எதிராக முழுக்கமிட்டனர்.

SCROLL FOR NEXT