தமிழகம்

தமிழகத்தில் கவுரவக் கொலைகள் அதிகரிப்பு: தமிழக காங்.

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கவுரவக் கொலைகள் அதிகரித்துள்ளன என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி எஸ்.டி பிரிவு தலைவர் கு.செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து சென்னையில் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசினார்.

''தமிழகத்தில் கவுரவக் கொலைகள் அதிகரித்துள்ளன. கவுரவக் கொலைகளைத் தடுக்க போலீஸ், உளவுத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவேண்டும். சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்தவேண்டும்.

தமிழகத்தில் ஆதிதிராவிட, பழங்குடியின மக்களை காங்கிரஸ் ஒன்றிணைக்கும்'' என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

          
SCROLL FOR NEXT