தமிழகம்

காசநோய் விழிப்புணர்வு போதாது: தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

செய்திப்பிரிவு

காசநோய் குறித்த விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை என்று தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் லலிதா குமார மங்கலம் தெரிவித்தார்.

தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் (ஐசிஎம்ஆர்) “பெண்கள் மற்றும் குழந்தைகளின் காசநோய் பாதிப்பு” குறித்த கருத்தரங்கம் நேற்று நடந்தது. மையத் தின் இயக்குனர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் லலிதா குமார மங்கலம் தொடங்கி வைத்து பேசுகையில், “நாட்டில் காசநோய் குறித்த விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை. மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூல மாக விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்” என்றார்.

டாக்டர் சவுமியா சுவாமி நாதன் பேசுகையில், “காசநோய்க்கு 1920-ம் ஆண்டு தடுப்பூசியும், 1940-ம் ஆண்டு மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனாலும் இதுவரை காச நோயை முழுமை யாக கட்டுப்படுத்த முடிய வில்லை. இந்தியாவில் ஆண்டுக்கு 20 லட்சம் முதல் 25 லட்சம்பேர் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். 3 லட்சம் முதல் 5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். கிராமங் களில் உள்ள விறகு அடுப்பு, மற்றும் நெருக்கடியான வாழ்க்கை போன்றவைகளும் காசநோய் பாதிப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT