தமிழகம்

வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கு: அக்ரி கிருஷ்ணமூர்த்தி உதவியாளரிடம் விசாரணை - முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகத் தகவல்

செய்திப்பிரிவு

வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர் பூவையாவிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்ட வேளாண்மைத் துறை அதிகாரி முத்துகுமாரசாமி, கடந்த மாதம் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். தற் காலிக ஓட்டுநர்கள் பணி நியமனத் துக்கு, மேலிடத்தில் இருந்து கொடுக் கப்பட்ட கடும் நெருக்கடியே, தற் கொலைக்கு காரணம் என்று வேளாண் அலுவலர்கள் குற்றஞ் சாட்டினர்.

இதனையடுத்து, அக்ரி கிருஷ்ண மூர்த்தியிடம் இருந்த திருவண்ணா மலை மாவட்ட (தெற்கு) செயலாளர் பொறுப்பும் வேளாண்மைத் துறை அமைச்சர் பதவியும் அடுத் தடுத்து பறிக்கப்பட்டது. மேலும், வேளாண் அதிகாரி முத்துகுமார சாமி தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப் பட்டது. இதையடுத்து, காவல் கண் காணிப்பாளர் அன்பு தலைமை யிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருவண்ணா மலை கோபுர வீதியில் வசித்து வரும் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உதவியாள ரும், ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரியுமான பூவையா என்பவரை விசாரணைக்காக சிபிசிஐடி போலீ ஸார் நேற்று அழைத்துச் சென்றனர். சென்னையில் அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. அவரது வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் மற்றும் சில முக்கிய குறிப்புகளை சிபிசிஐடி போலீஸார் கைப்பற்றியுள்ளதாகத் தெரிகிறது. அவர், எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT