மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 23-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
நிலம் கையகப்படுத்தும் சட்டம் விவசாயிகளின் பாதுகாப்புக்கும் வாழ்வாதாரத்துக்கும் எதிரா னது. பன்னாட்டு தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவாகவே இச்சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்துள்ளது. இதை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. இச்சட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் 23-ம் தேதி மிகப்பெரிய போராட்டத்தை நடத்த உள்ளோம்.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுபட வேண்டும் என்பதற்காகவே, நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை அதிமுக ஆதரித்துள்ளது. இந்தச் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும்.
தனி மனித சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் ராகுல் காந்தியின் இல்லத்தில் அவர் இல்லாத நேரம் பார்த்து உளவுத்துறை 3 முறை சோதனை நடத்தியுள்ளது. இதை ஏற்க முடியாது. நெல்லையில் வேளாண் அதிகாரி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அரசு முறை யாக ஒப்புதல் வழங்கவில்லை என்று சிபிசிஐடி கூறுகிறது. வேளாண் துறை அமைச்சராக இருந்தவரை இதுவரை கைது செய்யவில்லை. இவை அனைத்தையும் கண்டித்து போராட்டம் நடத்த உள்ளோம்.
நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் 20-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. திமுக முன்னரே ஆர்ப்பாட்டத்தை அறிவித் துவிட்டதால், அவர்களுடன் சேர்ந்து போராட முடியவில்லை. எதிர்காலத்தில் இணைந்து போரா டும் சூழல் வரும். இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.