தமிழகம்

தண்டவாளத்தில் நின்று சண்டை போட்டபோது மின்சார ரயில் மோதியதில் வாலிபர் பலி: இளம்பெண் காயம்

செய்திப்பிரிவு

தண்டவாளத்தில் நின்று சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது மின்சார ரயில் மோதியது. இதில் வாலிபர் பலியானார். இளம்பெண் காயம் அடைந்தார்.

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இரும்புலியூர் செல்லும் வழியில் நேற்று முன்தினம் இரவு தண்டவாளத்தில் நின்றபடி ஒரு வாலிபரும் 30 வயதுடைய இளம்பெண்ணும் சண்டை போட் டுக் கொண்டிருந்தனர். அப்போது கடற்கரையில் இருந்து செங்கல் பட்டு சென்ற மின்சார ரயில், அவர்கள் மீது மோதியது. இதில், வாலிபர் அதே இடத்தில் இறந்துவிட்டார். பெண்ணுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அருகே இருந்தவர்கள் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தாம்பரம் ரயில்வே போலீஸார் விரைந்து வந்து காயமடைந்த பெண்ணை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாலிபரின் உடலையும் அதே மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

காயமடைந்த பெண் வைத் திருந்த செல்போனை ஆய்வு செய்தபோது, அவரது கணவரின் எண் இருந்தது. உடனடியாக அவரது கணவரை போலீஸார் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித் தனர்.

இறந்தவரின் பர்ஸில் இருந்த முகவரியை வைத்து அவர் தாம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பாஸ்கர் (26) என்பது தெரிந்தது.

இதற்கிடையே, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண், திடீரென மாயமாகி விட்டார். பாஸ்கருக்கும் அந்தப் பெண்ணுக்கும் என்ன பிரச்சினை, எதற்காக அவர்கள் சண்டை போட்டனர் என்ற விவரங்கள் குறித்த போலீஸார் விசாரித்து வருகின்றனர். தலைமறைவான பெண்ணையும் தேடி வருகின் றனர்.

SCROLL FOR NEXT