தமிழகம்

குழந்தையின்மைக்கு பெண் மட்டுமே குற்றவாளியா? - ஆகாஷ் மருத்துவமனை மகளிர்தின விழாவில் வாசுகி கேள்வி

செய்திப்பிரிவு

ஆகாஷ் குழந்தையின்மைக்கான சிகிச்சை மையம் மற்றும் மருத்துவமனை சார்பாக உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் மற்றும் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதில் பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்தியத் துணை தலைவர் உ.வாசுகி பேசியதாவது:

ஒரு தம்பதிக்கு குழந்தை இல்லையென் றால் இந்த சமூகத்தில் பெண்ணைத்தான் குற்றவாளியாக கருதுகிறார்கள். குழந் தையின்மைக்கு காரணமாக கூறப்படும் மலட்டுத்தன்மைக்கு ஆண், பெண் இரு வரும்தான் காரணம் என்ற கருத்து படித்தவர்களிடம் கூட குறைவாக காணப் படுகிறது. இது மாற்றப்பட வேண்டும்.

பெரிய உணவு விடுதிகள் போன்ற இடத்தில் ஆண்கள் சமைப்பது, இடத்தை சுத்தம் செய்வது போன்ற பணிகளைச் செய்கிறார்கள். ஆனால் அதே பணியை வீட்டில் செய்வதில்லை. அது பெண்களின் வேலை என்று ஒதுக்கப்படுகிறது. ஆணும், பெண்ணும் சமம் என்ற கருத்தை அனைத்து தளங்களிலும் கொண்டு செல்ல வேண்டும். ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனையின் நிறுவனர் மருத்துவர் டி. காமராஜ், ஜெயராணி காமராஜ், மெகா தொலைக் காட்சியின் நிர்வாக இயக்குநர் ஜெயந்தி தங்கபாலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT