தமிழகம்

ஈழக் கவிஞர் கி.பி.அரவிந்தன் பிரான்ஸில் காலமானார்

செய்திப்பிரிவு

ஈழக் கவிஞரும், எழுத் தாளருமான கி.பி.அரவிந்தன் உடல்நலக் குறைவால் பிரான்ஸில் நேற்று காலமானார்.

தமிழீழ விடுதலைப் போராட்ட முன்னோடி களில் ஒருவராகத் திகழ்ந்தவர் கி.பி.அரவிந்தன். 1953-ம் ஆண்டு நெடுந்தீவில் பிறந்த இவரது இயற்பெயர் கிறிஸ்டோபர் பிரான்சிஸ். 1972-ம் ஆண்டில் இலங்கையில் அரசியல் சாசனத்துக்கு எதிரான துண் டறிக்கை விநியோகித்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய் யப்பட்ட மூவரில் அரவிந்தனும் ஒருவர். 90களில் பிரான்ஸில் குடியேறினார். இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போருக்கு பிறகு, புதினம் இணையதளம் நிறுத்தப் பட்டதால், புதினப் பலகை என்ற செய்தி இணையதளத்தை உருவாக்கியதில் அரவிந்தன் முக்கியப் பங்கு வகித்தார். பல்வேறு கவிதைத் தொகுதிகளையும், நூல்களையும் எழுதியுள்ளார். அப்பால்தமிழ் என்ற இணைய இதழையும் நடத்தி வந்தார்.

கடந்த 5 ஆண்டுகளாக கி.பி.அரவிந்தன் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பிரான்ஸில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இறந்தார்.

SCROLL FOR NEXT