தமிழகம்

சென்னை விமான நிலைய கண்ணாடி 37வது முறையாக உடைந்து விழுந்தது

செய்திப்பிரிவு

சென்னை விமான நிலையம் புதுப்பிக்கப்பட்ட பின்னர் 37-வது முறையாக கண்ணாடி உடைந்து கீழே விழுந்தது.

சென்னை விமான நிலையம் புதுப்பிக்கப்பட்டு கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட மேற்கூரை இடிந்து விழுவதும், கண்ணாடிகள் உடைவதும் தொடர்கதையாக நடந்து வருகின்றன. இதுவரை 36 முறை கண்ணாடிகள் உடைந்துள்ளன.

இன்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு விமானம் மூலம் சென்னை வந்தார். அவர் உள்நாட்டு விமான நிலைய முனையத்தின் 3–வது கதவு வழியாக காலை 11.20 மணிக்கு வர இருந்தார். இதையொட்டி மத்திய தொழிற்படை காவலர்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், காலை 11.10 மணியளவில் 3–வது கதவு கூரை கண்ணாடி உடைந்து விழுந்தது. ஆனால் தொழிற்படை காவலர்கள் அங்கிருந்து ஓடியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவத்தால் வெங்கையா நாயுடுவை உள்நாட்டு முனையத்தின் 2–வது கதவு வழியாக தொழிற்படை காவலர்கள் வெளியே அழைத்து வந்தனர்.

இந்த விபத்தில் பயணிகளுக்கோ, ஊழியர்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

SCROLL FOR NEXT