சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒருங் கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை மாதிரி கிராம திட்டம் 150 கிராமங்களில் செயல்படுத்தப்பட உள்ளதாக வேளாண் இயக்குநர் மு.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு வேளாண்மைத் துறை இந்த ஆண்டு 1 கோடியே 45 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி இலக்கை நிர்ண யித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் நஞ்சில்லா உணவு தானிய உற்பத்தி செய்ய அரசு சார்பில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை மாதிரி கிராம திட்டம் அறிவிக்கப்பட்டது.
உயிர் அணுகுமுறை வாயிலாக பூச்சி மற்றும் பயிர் நோய் மேலாண்மை தொழில்நுட்பத்தை, தேசிய தாவர சுகாதார மேலாண்மை நிறுவன உதவியுடன் வேளாண் துறை செயல்படுத்தவுள்ளது.
இதை செயல்படுத்தும் தொழில்நுட்ப அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் வேளாண் துறை அமைச்சர் ஆர்.வைத்தி லிங்கம் கலந்துகொண்டு இத்திட் டத்தின் பயன் விவசாயிகளை சென்றடைய நடவடிக்கை எடுக்கு மாறு அறிவுறுத்தினார். இத்திட்டம் ரூ.3 கோடி 30 லட்சம் செலவில் 16 மாவட்டங்களில், 150 கிராமங் களில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் வேதி பூச்சிக்கொல்லிகளை தவிர்த்து, விவசாயிகளே உயிரியல் கட்டுப் பாட்டு காரணிகளை உற்பத்தி செய்யலாம். சூழ்நிலையோடு ஒருங்கிணைந்த வேளாண் தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு அளித்து சாகுபடி செலவு குறைக்கப் படும். விவசாயியின் வாழ்வாதாரத் தோடு பூச்சி நோய் மேம் பாட்டு திறனிலும் தன்னிறைவு அடைய முடியும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.