தமிழகம்

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கையை பிரதமர் மோடி கண்டிக்க வாசன் கோரிக்கை

செய்திப்பிரிவு

தமாகா தலைவர் ஜி.கே வாசன் நேற்று வெளியிட்ட அறிக் கையில் கூறியுள்ளதாவது:

இலங்கைப் பிரதமர் ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் எல்லை தாண்டி வருபவர்களை சுட்டுக் கொள் வதற்கு இலங்கை கடற்படை யினருக்கு அதிகாரம் இருப்ப தாக தான் ஏற்கெனவே கூறியி ருந்ததில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்று மீண்டும் கூறியுள்ளார்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கை சென்றிருந்த போது, இலங்கை பிரதமரின் பேச்சை சுட்டிக் காட்டியதாகவும், அதற்கு இலங்கை வருத்தம் தெரிவித்த தாகவும் கூறியுள்ள நிலையில், மறுபுறம் அதே கருத்தை இலங்கை பிரதமர் மீண்டும் கூறியுள்ளது முரண் பாடாக அமைந்துள்ளது. இந்திய பிரதமரின் இலங்கை பயணம் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வளிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அது கேள்விக் குறியாகி யுள்ளது. எனவே, பிரதமர் மோடி இலங்கையின் இந்த செயலை கடுமை யாக கண்டிப்பதோடு, மீனவர் கள் பிரச்சினையை தீர்க்க உறுதியான நட வடிக்கையை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT