தமிழகம்

குடமுழுக்கு திருப்பணிகளையொட்டி காஞ்சி காமாட்சியம்மன் கோயில் கோபுரக் கலசங்கள் இறக்கம்

செய்திப்பிரிவு

காஞ்சி காமாட்சியம்மன் கோயி லில், குடமுழுக்கு திருப்பணி களுக்காக ராஜகோபுரத்தில் உள்ள தங்கக் கலசம் சீரமைப்பு பணிகளுக் காக கீழே இறக்கப்பட்டது.

காஞ்சிபுரம் நகரின் மையப் பகுதியில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோயில் அமைந் துள்ளது. இந்த கோயிலில், கடந்த 1994-ம் ஆண்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. இந்நிலையில், கோயிலில் உள்ள அம்பாள் சந்நிதி மற்றும் மூலவ விமானங்கள் மற் றும் ராஜகோபுரங்கள் புதுப்பித்து திருப்பணிகள் மேற்கொள்ள கோயில் நிர்வாகம் திட்டமிட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாலாலயம் செய்யப்பட்டு திருப் பணிகள் தொடங்கின. இதன் ஒரு பகுதியாக ராஜகோபுரத்தில் உள்ள தங்கம் மற்றும் செப்புக் கலசங்களை புதுப்பிப்பதற்காக அவை கீழே இறக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, இந்து அறநிலையத் துறை துணை ஆணையர் தனபால் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் கோபுரத்திலிருந்து கலசங்கள் கீழே இறக்கப்பட்டு புதுப்பிக்கும் பணி தொடங்கியது.

இதுகுறித்து, கோயில் செயல் அலுவலர் தியாகராஜன் கூறியதா வது: காமாட்சியம்மன் கோயி லில், 20 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. கலசங்கள் புதுப்பிப்பு பணிக்காக கோபுரத்தில் இருந்த 5.5 அடி உயரமுடைய 4 கிலோ தங்க முலாம் பூசப்பட்ட கலசம் மற்றும் 6 செப்பு கலசங்கள் கீழே இறக்கப்பட்டது. இவற்றை பாதுகாப்பாக புதுபித்து மீண்டும் ராஜகோபுரத்தில் நிறுவப்படும். இந்தத் திருப்பணிகளை வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

SCROLL FOR NEXT