தமிழகம்

பட்டினப்பாக்கத்தில் சாலை விரிவாக்கப் பணிக்கு பசுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை

செய்திப்பிரிவு

பட்டினப்பாக்கம் கடற்கரையில் மாநகராட்சி மேற்கொண்டுவரும் சாலை விரிவாக்கப் பணிக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத் தின் தென்னிந்திய அமர்வு இடைக் காலத் தடை விதித்துள்ளது.

சென்னையை சேர்ந்த எஸ்.வெங்கடேஷ் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். ‘‘சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் சாலையை 2.5 மீட்டர் அளவுக்கு விரிவாக்கம் செய்யும் பணியை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

இது கடலோர ஒழுங்குமுறை மண்டலம் தொடர்பாக மத் திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை 2011-ல் வெளியிட்ட அறிவிக்கைக்கு எதிரானது.

எனவே, அந்த பணிக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று மனுவில் அவர் கோரியிருந்தார்.

தீர்ப்பாய அமர்வின் நீதித் துறை உறுப்பினர் எம்.சொக்க லிங்கம், தொழில்நுட்பத் துறை உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த உறுப்பி னர்கள், மாநகராட்சி மேற் கொண்டுவரும் சாலை விரி வாக்கப் பணிக்கு 24-ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்தனர். இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர், மாநில சுற்றுச்சூழல் வனத்துறை செயலர், தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஆகியவை அடுத்த விசாரணையின்போது பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி, விசாரணையை 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT