தமிழகம்

தமிழக அரசு பரிந்துரைத்தால் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை: மத்திய அரசு பரிசீலிக்கும் என அமைச்சர் தகவல்

செய்திப்பிரிவு

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை அளிக்க தமிழக அரசு பரிந்துரைத்தால், அதுகுறித்து மத்திய அரசு பரிசீலிக்கும் என கும்மிடிப்பூண்டி வந்த மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், கும் மிடிப்பூண்டியில் பெத்திக்குப்பத் தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளின் 943 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 136 பேர் அகதிகளாக தங்கி உள்ளனர்.

இந்நிலையில், கும்மிடிப் பூண்டி இலங்கை அகதிகள் முகாமினை மத்திய உள்விவகாரங் களுக்கான இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ நேற்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவரிடம் முகாம் தலைவர் சிவ குமார் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், இலங்கை தமிழ் பகுதியில் 13 வது சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். அகதி முகாம்களில் உள்ள உயர் கல்வி மாணவர் களுக்கு அரசு கல்வி கட்டணம் அளிக்க வேண்டும், கல்வி பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும். கடவுச் சீட்டு, விசா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

பிறகு, அகதிகள் மத்தியில் அமைச்சர் பேசும்போது, ‘தமிழக அரசு, அகதிகளுக்கு அடிப்படை வசதிகள் மட்டுமல்லாமல், அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் உதவிகளை செய்து வருகிறது. முகாமில் எவ்வளவு காலம் அகதிகள் வசிக்க விரும்புகிறார்களோ, அவ்வளவு காலம் வரை, அவர்களுக்கு தேவையான கல்வி, வேலை வாய்ப்பு தொடர்பான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும்.

அகதிகளுக்கான கடவுச் சீட்டு, விசா தொடர்பான அகதி களின் கோரிக்கைகள் குறித்து, வெளியுறவுத் துறை அமைச் சகம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிறகு, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போது, ‘இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை அளிக்க தமிழக அரசு பரிந்துரைத்தால், அதுகுறித்து மத்திய அரசு பரிசீலிக்கும். ஐ.நா.சபையில் அகதிகள் தொடர்பான எந்த ஒப்பந்தத்திலும் இந்தியா கையெழுத்திடவில்லை. இருப்பினும், நாடு முழுவதும் உள்ள அகதிகள் முகாமில் வசிக் கும் அகதிகள் நலனில் மிகுந்த அக்கறை செலுத்தப்படு கிறது. மேலும், அகதிகளுக்கான கொள்கை குறித்து தேவைப் பட்டால் விவாதித்து அரசு முடிவெடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது உள் துறை அமைச்சகத்தின் இணை செயலர் பதக், தமிழக அரசின், பொது மற்றும் மறுவாழ்வுத் துறையின் முதன்மை செயலர் ஜிதேந்தரநாத் ஸ்வான், தமிழகத் துக்கு வெளியே வசிக்கும் தமிழர் நலனுக்கான ஆணையர் ஆனந்த் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT