சென்னை அண்ணாநகர் 2-வது பிரதான சாலையில் தமிழ்செல்வி என்ற பெண் 2007-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். அவர் அணிந்திருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டன. அடுத்த சில நாட்களில் நொளம் பூரில் ஒரு பெண் இதேபோல கொலை செய்யப்பட்டு, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொலை வழக்குகள் தொடர் பாக பெரம்பூரை சேர்ந்த ஜெயக் குமார்(40) என்பவர் கைது செய்யப் பட்டார். இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி பரோலில் வெளியே வந்த ஜெயக்குமார், 24-ம் தேதி தலைமறைவானார். இதைத் தொடர்ந்து போலீஸார் அவரைத் தேடிவந்தனர். நேற்று முன்தினம் இரவில் பெரம்பூரில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த ஜெயக்குமாரை போலீஸார் கண்டுபிடித்து கைது செய்தனர்.
ஜெயக்குமாரை கைது செய்த ஆய்வாளர் சுகுமார்(62) ஓய்வு பெற்ற நிலையில், அவருக்கு ஜெயக்குமார் பலமுறை கொலை மிரட்டல் விடுத்திருந்தார். இதனால் சுகுமாரின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஜெயக்குமார் கைது செய்யப்பட் டதை தொடர்ந்து முன்னாள் ஆய் வாளர் சுகுமார், மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இருந்த அச்சுறுத்தல் நீங்கியுள்ளது.