தமிழகம்

குரூப்-2 மெயின் தேர்வு முடிவு அடுத்த வாரம் வெளியாகிறது

செய்திப்பிரிவு

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற குரூப்-2 மெயின் தேர்வு முடிவு அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

சிவில் நீதிபதி பணிக்கான சான் றிதழ் சரிபார்ப்பு சென்னை டிஎன்பி எஸ்சி அலுவலகத்தில் நேற்று தொடங் கியது. இப்பணியை பார்வையிட்ட டிஎன்பிஎஸ்சி தலைவர் சி.பாலசுப்பிர மணியன் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசின் நீதித்துறையில் 162 சிவில் நீதிபதி காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று (நேற்று) தொடங்கி 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் இரண்டு நாட்களில் தலா 55 பேரும் எஞ்சியுள்ள நாட்களில் தினமும் 120 பேரும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பின்னர் நேர்முகத் தேர்வு நடத்தப் படும். இதேபோல், மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-2) பணிக்கான சான்று சரிபார்ப்பும் இன்று தொடங் கியிருக்கிறது. இதற்கான நேர்முகத் தேர்வு நாளை (இன்று) நடைபெறு கிறது. குரூப்-2 மெயின் தேர்வு முடிவு அடுத்த வாரம் வெளியிடப்படும். அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட குருப்-4 தேர்வின் முடிவை ஒன்றரை மாதத்தில் வெளி யிட திட்டமிட்டுள்ளோம் என்றா

SCROLL FOR NEXT