தமிழகம்

கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்கல்வி ஆசிரியர்கள் பேரணி

செய்திப்பிரிவு

ஓய்வூதிய கணக்கீட்டுக்கு தொகுப்பூதிய பணிக்காலத்தை சேர்த்துக்கொள்வது, தேர்வுநிலை தரஊதியமாக ரூ.5,400 வழங்கு வது, தொழிற்கல்வி பாடத்தை அனைத்து மேல்நிலைப் பள்ளி களிலும் கட்டாயமாக்குவது, உயர்கல்விக்கு ஊக்க ஊதியம் உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்கல்வி ஆசிரியர்கள் சென்னையில் நேற்று பேரணி நடத்தினர்.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் சார்பில் நடைபெற்ற இந்த பேரணியை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே சிவகங்கை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.குணசேகரன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

பேரணிக்கு மாநிலத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். இதில் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். பின்னர் மாநில நிர்வாகிகள் தலை மைச் செயலகத்துக்குச் சென்று நிதித்துறை (செலவினம்) செய லர் டி.உதயச்சந்திரனை சந் தித்து கோரிக்கை மனு அளித் தனர்.

SCROLL FOR NEXT