தமிழகம்

தீயணைப்பு வீரர்கள் 62 பேருக்கு முதல்வர் விருது

செய்திப்பிரிவு

தீயணைப்புத் துறையில் சிறப்பாக செயல்பட்ட 62 பேருக்கு 'முதல்வர் விருது' வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ம் தேதி தீயணைப்பு தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தீயணைப்புத் துறையில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்காக தமிழக அரசு சார்பில் ஒவ்வோ ராண்டும் 'முதல்வர் விருது' அளிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு சிறப்பாக பணிபுரிந்த சென்னை வண்ணாரப் பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் கே.கோபால், முதல் நிலை தீயணைப்பாளர் சம்பத் குமார், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் தீயணைப்பு நிலைய வீரர் மரியா எடிசன் உள்ளிட்ட 62 வீரர்களுக்கு ரொக்கப் பரிசும் முதல்வர் விருதும் வழங்கப்படுகிறது.

தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT