சென்னையில் ஏப்ரல் 13-ம் தேதி முதல் ‘சென்னை புத்தகச் சங்கமம்' என்ற பெயரில் புத்தகக் கண்காட்சி நடை பெறவுள்ளது.
உலக புத்தக நாளை (ஏப்ரல் 23) முன்னிட்டு குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினரிடமும் புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் ஏப்ரல் 13 முதல் 23ம் தேதி வரை ‘சென்னை புத்தகச் சங்கமம்' நடைபெறவுள்ளது.
ராயப்பேட்டை, ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த புத்தகக் கண்காட்சியை பெரியார் சுயமரியாதைப் பிரச் சார நிறுவனத்துடன் நேஷனல் புக் டிரஸ்டும், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகமும் இணைந்து நடத்து கின்றன.
இந்த ஆண்டு பதிப்பாளர் களுடன் புத்தக விற்பனையாளர் களும் பங்கேற்கும் வண்ணம் விரிவான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. இந்த புத்தகக் கண்காட்சியில் இடம் பெற விரும்பும் புத்தக விற்பனை யாளர்கள் அதற்கென உள்ள விண்ணப்பத்தை நிரப்பி இம்மாதம் 21-ம் தேதி (சனிக் கிழமை) மாலை 5 மணிக்குள் ளாக சென்னை, வேப்பேரி, பெரி யார் திடலில் உள்ள அலுவல கத்தில் அளிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 044-26618161/62/63 ஆகிய தொலை பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று கண் காட்சி மேலாளர் ப.சீதாராமன் தெரிவித்துள்ளார்.