ஈரோடு மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில், மாநகராட்சி பள்ளி களில் படிக்கும் எஸ்.எஸ்.எல்.சி முதல் பிளஸ் டூ வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச கைக்கடிகாரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், இத்திட்டம் பட்ஜெட் கூட்டத்தில் உடனடியாக தொடங்கி வைக்கப் பட்டது.
ஈரோடு மாநகராட்சியில், நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் மல்லிகா பரமசிவம் நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் பல திட்டங்கள் இடம் பெற்று இருந்தது. இதில், மாநகராட்சி பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி முதல் பிளஸ் டூ வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் கைக்கடிகாரம் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பும் இடம் பெற்று இருந்தது.
ரூ.10 லட்சம் மதிப்பில்..
இதன்படி 1,350 மாணவ, மாணவிகளுக்கு ரூ10 லட்சம் மதிப்பில் கைக்கடிகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பட்ஜெட் கூட்ட முடிவில், உடனடியாக சில மாணவியருக்கு இலவச கைக் கடிகாரங்களை மேயர் மல்லிகா பரமசிவம் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.