தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் காலியாக இருந்த பொருளாளர் பதவி மற்றும் 23 மாவட்டங்களின் தலைவர் பதவியில் புதிதாக நியமனம் செய்யப்படுபவர்கள் பட்டியலை காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் நேற்று வெளியிட்டார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் விலகியபோது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த ஞானதேசி கன், பொருளாளர் கோவை தங்கம் உட்பட 24 மாவட்ட காங் கிரஸ் தலைவர்கள் வாசனுடன் சென்றனர். இந்நிலையில், காலி யாக உள்ள பதவிகளில் நியமிக்கப் படும் புதிய நிர்வாகிகள் பட்டியலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் நேற்று வெளியிட்டார்.
பொருளாளர் நியமனம்
இதன்படி, மாநில பொருளாளர் பதவிக்கு நாசே ஆர்.ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர, 23 மாவட்டங்களின் தலைவர் பதவிக்கும் பெயர்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. மாவட்டங்கள் மற்றும் தலைவர் பெயர் விவரம்:
காஞ்சிபுரம் வடக்கு: வி.ஆர்.சிவராமன், காஞ்சிபுரம் தெற்கு: என்.தனபால், திருவண்ணாமலை தெற்கு: செங்கம் ஜி.குமார், வேலூர் மாநகர்: பி.டீகாராமன், வேலூர் கிழக்கு: சி.பஞ்சதந்திரம், ஈரோடு தெற்கு: சி.காந்தி, கோயம்புத்தூர் புறநகர்: எஸ்.மகேஷ்குமார், திண்டுக்கல் கிழக்கு: எஸ்.அப்துல் கனி ராஜா, திண்டுக்கல் மேற்கு: சிவசக்திவேல், மதுரை மாநகர்: அன்னபூர்ணா டி.தங்கராஜ், மதுரை தெற்கு: ஆர்.ஜெயராமன்.
திருச்சி வடக்கு: தொட்டியம் எம்.சரவணன், அரியலூர்: ஜி.ராஜேந்திரன், பெரம்பலூர்: ஆர்.மதனகோபால், திருவாரூர்: எஸ்.எம்.பி.துரைவேலன், தஞ்சை வடக்கு: டி.ஆர்.லோகநாதன், தஞ்சை தெற்கு: டி.கிருஷ்ணசாமி வாண்டையார், ராமநாதபுரம்: குட்லக் எஸ்.ராஜேந்திரன், தூத்துக்குடி வடக்கு: ஆர்.காமராஜ், தூத்துக்குடி தெற்கு: சிவசுப்ரமணியம், திருநெல்வேலி மேற்கு: எஸ்.கே.டி.பி.காமராஜ், கன்னியாகுமரி மேற்கு: அசோக் சாலமன், கன்னியாகுமரி கிழக்கு: வி.பாலையா ஆகியோர் மாவட்டத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.