தமிழகம்

செங்கல்பட்டில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள்: மொட்டையடித்து நூதன போராட்டம்

செய்திப்பிரிவு

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் போராட் டம் நடத்தி வரும் நிலையில் செங்கல்பட்டில் நேற்று மொட்டை யடித்து நூதன போராட்டம் நடத்தினர்.

கிராமிய அஞ்சல் ஊழியர்கள் 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 10-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் படி அஞ்சல்துறை இலாக்கா ஊழியர்களுக்கு வழங்கப் படும் மத்திய அரசின் சலுகை களை, கிராமிய அஞ்சல் ஊழியர் களுக்கும் வழங்க வேண்டும். ஊதியம், வேலை தொடர்பாக பரிசீலிக்க தனி நீதிபதி தலைமை யிலான கமிட்டி அமைக்க வேண்டும். அஞ்சல்துறையை தனி யாரிடம் ஒப்படைக்கக் கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக செங்கல்பட்டு கோட்டத்தில் உள்ள அஞ்சல் துறை அலுவலகம் முன்பு போராட் டம் நடந்து வருகிறது. போராட் டத்தின் 9-வது நாளான நேற்று கிராமிய அஞ்சல் ஊழியர்கள் 25 பேர் கோரிக்கைகளை வலியுறுத்தி மொட்டையடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்துக்கு கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க செய லாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

SCROLL FOR NEXT