தமிழகம்

கண்காணிப்பாளரை சஸ்பெண்ட் செய்யும் அறிவிப்பைக் கைவிட தொழிற்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கை

செய்திப்பிரிவு

தேர்வு அறையில் மாணவர் செய்யும் தவறுக்காக தேர்வறையின் கண்காணிப்பாளரை சஸ்பெண்ட் செய்யும் அறிவிப்பைக் கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த அமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டம், மாநிலத் தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் திருச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் அரசு பொதுத் தேர்வு மையங்களில் மாணவர் காப்பியடித்து பிடி பட்டால், அதற்காக தேர்வறைக் கண்காணிப்பாளரை சஸ்பெண்ட் செய்யும் அறிவிப்பை தேர்வுத் துறை இயக்குநர் திரும்பப் பெறவேண்டும்.

தொழிற்கல்வி ஆசிரியர்களின் தொகுப்பூதியக் காலத்தையும் சேர்த்து ஓய்வூதியம் வழங்க வேண்டும். தேர்வுநிலை ஊதிய மாக ரூ.5,400 வழங்கவேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத் தித் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

SCROLL FOR NEXT