மதிமுக வேட்பாளர்களுக்கு பம்பரம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைமை அலுவலகம் திங்கள் கிழமை வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பங்கு பெற்றுள்ள மதிமுக விருது நகர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), ஈரோடு, தேனி, தென்காசி (தனி), தூத்துக்குடி ஆகிய 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்தத் தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் மதிமுக கோரியிருந்தது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில் எங்கள் கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.