தமிழகம்

பஸ் தொழிலாளர்களின் ஊதிய பேச்சு மார்ச் 12-க்கு ஒத்திவைப்பு

செய்திப்பிரிவு

தமிழக அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் குறித்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தை மார்ச் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டை மாநகர போக்குவரத்து பயிற்சிப் பள்ளியில் இன்று தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தையில் அண்ணா தொழிற்சங்கம், தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட 42 தொழிற்சங்கங்கள் இதில் பங்கேற்றன.

12 ஆவது ஊதிய ஒப்பந்தம் குறித்து நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், தமிழக அரசு அமைத்த 14 பேர் குழு மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பாக தலா 2 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.இந்தக்கோரிக்கைகளை அரசிடம் கொண்டுசெல்வதாக தமிழக அரசு அமைத்த குழுவினர் உறுதி அளித்தனர்.

பேச்சுவார்த்தையின்போது அண்ணா தொழிற்சங்க பேரவை, தொழிலாளர் முன்னேற்ற சங்கம் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், ஊதிய ஒப்பந்தம் குறித்த 2 ம் கட்ட பேச்சுவார்த்தை மார்ச் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT