புதுக்கோட்டையில் நேற்று 2 அரசுப் பேருந்துகள் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் 29 பேர் காயமடைந்தனர்.
மதுரையிலிருந்து தஞ்சை சென்ற அரசுப் பேருந்தும், புதுக்கோட்டையிலிருந்து சிவகங்கை சென்ற அரசுப் பேருந்தும் புதுக்கோட்டை-திருமயம் சாலையில், மாலையீடு பகுதியில் நேற்று எதிர் பாராதவிதமாக நேருக்குநேர் மோதின.
இதில், பேருந்து ஓட்டுநர்கள் மதுரை முத்தையா(43), புதுக்கோட்டை ரவி(37), நடத்து நர்கள் சிவசண்முகம்(35), ராஜேந்திரன்(40) உட்பட 29 பேர் காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து புதுக்கோட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.