மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை விதித்துள்ள மகாராஷ்டிரா அரசைக் கண்டித்து சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சிலர் நேற்று மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டம் நடத்தினர்.
மகாராஷ்டிராவில் மாட்டு இறைச்சி விற்பனையை தடை செய்து அங்குள்ள பாஜக அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. தமிழகத்திலும் இதேபோல தடை விதிக்க வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், மாட்டு இறைச்சிக்கு தடை விதித்த மகாராஷ்டிரா அரசையும், தமிழகத்தில் அந்த சட்டத்தை அமல்படுத்தக் கோரும் ராம கோபாலனையும் கண்டித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சிலர் நேற்று மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டம் நடத்தினர். அதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.