தமிழகம்

சென்னை சென்ட்ரலில் வாகன ஆய்வுக்கு 2 ஸ்கேனர் கருவிகள்

செய்திப்பிரிவு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலை யத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வாகனங்களில் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் பயணிகளின் பாதுகாப்பு கருதி சென்ட்ரலில் 2 இடங்களில் ரூ.50 லட்சம் செலவில் அதிநவீன ஸ்கேனர் கருவிகளை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன. மேலும், இன்னும் ஒரு வாரத்தில் இந்த பணிகள் முழுவதுமான முடிக்கப்படவுள்ளன.

இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் என்.அழகர்சாமி கூறியதாவது:

பயணிகளின் பாதுகாப்பை கருத் தில் கொண்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காரின் அடிப் பகுதியை சோதனை செய்யும் அதிநவீன ஸ்கேனர் கரு விகள் 2 இடங்களில் அமைக் கப்படவுள்ளன.

வால்டாக்ஸ் சாலையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்குள் வரும் நுழை வாயிலிலும், மூர்மார்க்கெட் ரயில் நிலையத்தை ஒட்டி சென்ட்ரலுக்குள் வரும் நுழைவாயிலிலும் இவை அமைக்கப்படவுள்ளன. பூமிக்குள் சுமார் 4 அடிகள் வரை தோண்டி கேமிராக்கள் நிறுவப்படும்.

இதற்கான பணிகள் ஓரிரு நாட்களில் தொடங்கும். காரின் அடிப்பகுதியில் வெடிகுண்டு இருந்தால், இந்த கருவி துல்லியமாக படம்பிடித்து காட்டிவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT