புதுச்சேரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது ஏற்பட்ட மோதல் தொடர்பாக நாடாளுமன்ற உறுப் பினர் கண்ணன் மீது 4 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய் துள்ளனர்.
புதுச்சேரி நகராட்சி ஊழியர்கள் கடந்த 14-ம் தேதி இரவு கம்பன் கலையரங்கம், புஸ்ஸி வீதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி னர். இதை அறிந்த புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் கண் ணன் தனது ஆதரவாளர்களுடன் சென்று ஆக்கிரமிப்புகளை அகற்று வதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது நகராட்சி ஆணையர் மற்றும் ஊழியர்கள் தாக்குதலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை துப்புரவுப் பணிகள் புதுச்சேரியில் நடைபெறவில்லை. கண்ணன் எம்.பி-யை கைது செய்யக் கோரி நகரெங்கும் நகராட்சி ஒப்பந்ததாரர் கள் தரப்பில் போஸ்டர்கள் ஒட்டப் பட்டிருந்தன.
நகராட்சி அதிகாரிகள், ஊழியர் கள் வேலைநிறுத்தம் செய்ததோடு, நகராட்சி அலுவலகம் வெளியே கம்பன் கலையரங்கு வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். அப்போது அவர்கள் கூறும்போது, “அதிகாரிகள் தரப்பில் புகார் தரப்பட்டுள்ளது. ஆனால் போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை.
கண்ணன் எம்.பி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி ஆணையர், ஊழியர்களுக்கு கடமையைச் செய்யும்போது பாதுகாப்பு வழங்க வேண்டும். நகராட்சி அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக நட வடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். ஊழியர்கள் போராட்டத் தால் நகராட்சி அலுவலகத்தில் பணிகள் முடங்கின.
இதே கோரிக்கையை வலி யுறுத்தி வடக்கு எஸ்.பி. அலு வலகத்தை திராவிடர் விடுதலைக் கழகத்தினர் மாநில தலைவர் லோகு அய்யப்பன் தலைமையில் முற்றுகையிட்டனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 103 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் ஒதியஞ்சாலை போலீஸார் கண்ணன் எம்.பி. மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் குமரன் அளித்த புகாரின் பேரில் ஐபிசி 353 (அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல்), 294 (தகாத வார்த்தையால் திட்டுதல்), 506 (1) (கொலை மிரட்டல்) உட்பட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய் துள்ளதாக தெரிவித்தனர். உள் துறை ஒப்புதல்பெற்று இந்த நட வடிக்கை எடுக்கப்பட்டதாக போலீஸ் உயர் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
வக்கீல்கள் தரப்பில் கேட்ட தற்கு, கண்ணன் எம்.பி. மீது ஜாமீ னில் வெளிவர முடியாத பிரிவு களில் வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இதனால் அவர் நீதி மன்றத்தில் முன்ஜாமீன் பெற வேண் டிய நிலை உள்ளது என்றனர்.