தமிழகம்

பைக்கிலிருந்து தவறி விழுந்தபோது கார் ஏறியதில் சாப்ட்வேர் இன்ஜினீயர் பலி

செய்திப்பிரிவு

பைக்கிலிருந்து தவறி விழுந்த போது கார் ஏறியதில் சாப்ட்வேர் இன்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆந்திராவை சேர்ந்தவர் சத்திய நாராயணன் (28). வேளச்சேரியில் ராஜலட்சுமி நகர் 3-வது மெயின் ரோட்டில் உள்ள வாடகை வீட்டில் நண்பர்களுடன் தங்கிக் கொண்டு, துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினீயராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு துரைப்பாக்கத்தில் உள்ள தனது நண்பரை பார்க்க சத்தியநாராயணன் பைக்கில் சென்றார்.

பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் பெருங்குடி குப்பை கிடங்கு அருகே சென்றுக் கொண்டிருந்த போது, திடீரென பைக் சக்கரம் வழுக்கியுள்ளது இதில் நிலைதடுமாறிய சத்தியநாராயணன் கீழே விழுந்தார். பின்னால் வேகமாக வந்த கார், அவர் மீது ஏறி இறங்கியது. இந்த விபத் தில் சத்தியநாராயணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, குரோம் பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து திண்டிவனத்தை சேர்ந்த கார் டிரைவர் பார்த்திபன் (29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT