சென்னை: ஈரானில் சிக்கித் தவித்த இந்திய மீனவர்கள் 345 மீட்கப்பட்டு, ஆர்மீனியா நாட்டில் இருந்து சிறப்பு தனி விமானத்தில் நேற்றிரவு 7 மணிக்கு சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 327 பேர். கேரளா 10, புதுச்சேரி 5, குஜராத் 2, ஒடிசாவை சேர்ந்த ஒருவர். விமான நிலையத்திலிருந்து வெளியில் வந்த மீனவர்களை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் அனைவரும் சிறப்பு பேருந்துகளில் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.