தமிழகம்

வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரித்தால்தான் உண்மைகள் வெளிவரும் - விஜயகாந்த், இரா.முத்தரசன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

வேளாண்மை உதவி செயற்பொறி யாளர் முத்துக்குமாரசாமி தற் கொலை வழக்கை சிபிஐ விசாரித்தால்தான் உண்மைகள் வெளிவரும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை:

நெல்லையில் வேளாண்மை துறை உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் வேளாண் துறை அமைச்சராக இருந்த அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ண மூர்த்தியின் அமைச்சர் பொறுப்பும், கட்சிப் பொறுப்பும் பறிக்கப் பட்டன. வீட்டு வசதித்துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கத் துக்கு வேளாண்மைத்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட் டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு ஈரோட் டில் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான இடத்தை விற்பனை செய்வதில் வீட்டுவசதி வாரிய நிர்வாக இயக்குநர், வாரியத் தலைவர் மற்றும் துறையின் அமைச்சர் மீது புகார் எழுந்தது. இதற்கான வீடியோ ஆதாரங்கள் வெளியான நிலையில், ஈரோடு வீட்டு வசதி வாரிய உதவி செயற் பொறியாளர் பழனிச்சாமி தற் கொலை செய்துகொண்டார். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீதும் இதுவ ரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

இந்தச் சூழலில் வைத்திலிங்கத் துக்கு கூடுதல் பொறுப்பாக வேளாண் துறையை அளித்திருப் பது வியப்பாக உள்ளது. முத்துக் குமாரசாமி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்தால் உண்மைகள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வரும்.

இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

முத்தரசன் அறிக்கை

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளி யிட்டுள்ள அறிக்கையில், ‘அமைச்ச ராக இருந்த அக்ரி கிருஷ்ண மூர்த்தியின் நிர்ப்பந்தத்தை எதிர்கொள்ள முடியாமல் வேளாண் துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண் டுள்ளார். இதையடுத்து அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கட்சிப் பொறுப்பிலிருந்தும் அமைச் சரவையில் இருந்தும் அதிமுக தலைமை நீக்கியுள்ளது.

ஆனால், கட்சியில் இருந்து அவரை நீக்காதது ஏன்? இந்த வழக்கை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிறப்பு குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிசிஐடி) மாற்றுவது நியாயம் கிடைக்க வழி வகுக்காது.

எனவே, இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT