தமிழகம்

போக்குவரத்து ஊழியர்களுடன் நாளை பேச்சு

செய்திப்பிரிவு

போக்குவரத்து ஊழியர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பான 2-ம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் நாளை (12-ம் தேதி) நடக்கவுள்ளது. இதுதொடர்பாக அனைத்து தொழிற்சங்கங்களின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று நடக்கிறது.

ஏற்கெனவே அறிவித்தபடி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குரோம்பேட்டையில் நாளை (12-ம் தேதி) காலை 11 மணி அளவில் தொடங்கவுள்ளது. இதில், அரசு குழுவினருடன் தொழிற்சங்க பிரதிநிதிகள் முக்கிய கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்துகின்றனர். பேச்சுவார்த்தையின்போது, அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை குறித்து சிஐடியு துணைத் தலைவர் எம்.சந்திரனிடம் கேட்டபோது, ‘‘அடுத்தகட்ட பேச்சு வார்த்தையின்போது, தொழிலாளர் களின் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளோம். இது தொடர் பாக அனைத்து தொழிற்சங்கங் களுடன் இன்று ஆலோசனை நடத்தப்படுகிறது’’ என்றார்.

முன்னதாக கடந்த 2-ம் தேதி போக்குவரத்து ஊழியர்களுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு தரப்பினரிடையே மோதல் நடந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT