பவூஞ்சூரை அடுத்த நெல்வாய் பாளையம் கிராமத்தில், அரசு உதவி பெறும் தனியார் தொடக்கப் பள்ளியை தரம் உயர்த்தி அரசே ஏற்று நடத்த வேண்டும் என வகுப் பறைகளை மூடி மாணவர்களுடன் பெற்றோர் முற்றுகைப் போராட் டத்தில் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், பவூஞ் சூர் அடுத்த நெல்வாய்பாளையம் கிராமத்தில், அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல் பட்டு வருகிறது. இதில் அப்பகுதி யைச் சேர்ந்த 102 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலை யில், கடந்த ஆண்டு பள்ளியை தரம் உயர்த்தக் கோரி, பெற்றோர் கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து பள்ளி நிர் வாகம் 6-ம் வகுப்பை கொண்டுவந் தது. இதில், 17 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். ஆனால், 6-ம் வகுப்பு மாணவர்கள் 7 கி.மீ. தொலைவில் உள்ள பவூஞ்சூரில் உள்ள இதே பள்ளி நிர்வாகம் நடத்தி வரும் உயர்நிலைப் பள்ளியில் தேர்வு எழுத வேண் டும் என அறிவித்தது. இதனால், பெற்றோர்கள் அதிருப்தி அடைந் தனர்.
இந்நிலையில், தேர்வை புறக் கணித்து மாணவர்களுடன் பெற்றோர் பள்ளியை முற்றுகை யிட்டனர். பின்னர் வகுப்பறை களை மூடினர். பள்ளியை தரம் உயர்த்தி அரசே ஏற்று நடத்த வேண்டும்.உள்ளூர் பள்ளியி லேயே தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தினர். தகவல் அறிந்த செய்யூர் போலீஸார் மற் றும் கல்வித் துறையினர் பெற் றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும், இந்த ஆண்டுக் கான தேர்வை தொடக்கப் பள்ளியி லேயே எழுதலாம் என தெரிவித் தனர். இதை தொடர்ந்து, வகுப்பறைகள் திறக்கப்பட்டன.
இதுகுறித்து, லத்தூர் ஒன்றிய உதவி கல்வி அலுவலர் சித்ரா கூறியதாவது: பள்ளியை தரம் உயர்த்துவது, அரசு ஏற்பது தொடர்பாக உள்ளூர் நிர்வா கத்தை நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளோம். அப்பகுதி பொது மக்களையும் பள்ளியை தரம் உயர்த்துவது தொடர்பாக ஒத் துழைப்பு அளிக்கும்படி கேட் டுள்ளோம்,என்றார்.