தமிழகம்

காடுகளுக்கு தீ வைத்தால் குண்டர் சட்டம் பாயும்: கோடை தீ விபத்துகளை தடுக்க வனத்துறை நடவடிக்கை

செய்திப்பிரிவு

காடுகளில் தீ விபத்துகளை ஏற்படுத்து வோரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வனத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன், கொடைக்கானல், தேனி காடுகளில் தொடர்ந்து 4 நாள் செடி, கொடிகள் தீப்பற்றி எரிந்தன. இதுபோன்ற தீ விபத் துகளை தடுக்க, தீ பரவும் அபாய முள்ள தமிழக காடுகளில் வனத்துறை மூலம் தீ தடுப்புக் கோடுகள் அமைத்து, 24 மணி நேரமும் காடுகளை கண் காணிக்க நெருப்பு சேவகர்கள் நிய மிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் சம்பத் கூறிய தாவது: காடுகள் தீப்பற்றி கொள்வ தற்கு காரணமான வஸ்துகள் காடுகளி லேயே உள்ளன. புல், பூண்டுகள், மரம், செடி, மூங்கில், உதிர்ந்த சருகுகள், விதைகள் உள்ளன. வெயில் காலத்தில் ஒரு துளி நெருப்பு இவற்றில் எதிலாவது பட்டால்கூட அது பெரும் தீயாக மாறி வனம் முழுவதும் பரவி காட்டைபெரிதும் நாசம் செய்துவிடும்.

காடுகளில் நெருப்பு பிடிப் பதற்கு காரணம் மனிதர்கள். இவர்க ளுடைய கவனக்குறைவால் அடிக் கடி காடு தீப்பற்றி கொள்கிறது. வேட்டைக்காரர்கள் வனவிலங்குகளை தேடுவதற்கு வசதியாக காட்டில் நெருப்பை பற்ற வைக்கிறார்கள். வழிப்போக்கர்கள், சுற்றுலாப் பயணி கள், கால்நடை வளர்ப்போர் வீசியெறி யும் சிகரெட், பீடி துண்டுகளாலும் காட்டில் தீ பரவுகிறது. காடு களை இவர்களிடம் இருந்து பாது காக்க, தீவிபத்து அபாயம் உள்ள வனப்பகுதியில் காட்டின் எல்லைக்கு வெளியில் இருந்து வரும் தீ உள்ளே பிரவேசிக்க விடாமல் தடுக்க வெளி நெருப்புக் கோடுகள் போடப் படுகின்றன.

காட்டில் ஒரு பக்கத்தில் இருந்து பிடிக்கும் தீ, மற்ற பகுதிகளில் பரவாமல் தடுக்க வெளி நெருப்புக் கோடுகள் போடப்படுகின்றன. தீ விபத்து ஏற்படாமல் தடுக்கவும், ஏற் பட்டால் அவற்றை அணைக்கவும், வனத்துறையில் நெருப்பு சேவகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் கொடுவாள், துடைப் பத்துடன் காட்டிலேயே தங்கி ஷிப்ட் முறையில் சுற்றி திரிந்து பட்டுப்போன செடி, கொடி, சருகுகளை வெட்டி துடைப்பத்தால் பெருக்கி குழிகள், தொட்டிகளில் சேகரித்து நெருப்பு வைத்து அழிப்பார்கள். இவர்கள் காடுகளை விட்டு வெளியே வர மாட்டார்கள். இவர்களுக்கு வேண்டிய உணவு, தண்ணீரை வன ஊழியர்கள் எடுத்துச் சென்று வழங்குவர்.

காடுகளில் யாரும் நுழைய அனுமதி கிடையாது. நெருப்புக் குச்சி, சிக்கிமுக்கி உள்ளிட்ட தீ உண்டு பண்ணும் பொருட்களைக் கொண்டுச் செல்ல அனுமதி கிடையாது. காடுகளில் உள்ள மரத்தை வெட்டுவதைவிட காடு களில் தீ விபத்துகளை ஏற்படுத்து வது மிகப்பெரிய குற்றமாக கருதப் படுகிறது. அதனால், காடுகளில் தீ விபத்து ஏற்பட காரணமானவர்கள், தீ விபத்துகளை ஏற்படுத்துபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT