தமிழகம்

மதச்சார்பின்மை இல்லாமல் இந்தியா உயிர்வாழ முடியாது: ஆற்காடு இளவரசர் கருத்து

செய்திப்பிரிவு

மனிதன் உயிர்வாழ ஆக்ஸிஜன் எவ்வளவு முக்கியமோ அதுபோல, மதச்சார்பின்மை என்பது இந்தியாவுக்கு முக்கியம். அது இல்லாமல் நாடு உயிர்வாழ முடியாது என ஆற்காடு இளவரசர் கூறினார்.

ஜனநாயகம் மற்றும் சமூக இணக்கம் அமைப்பின் தமிழ்நாடு பிரிவின் சார்பில், ‘இன்றைய இந்தியாவில் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை’ என்ற தலைப்பிலான கருத்தரங்கு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், ஆற்காடு இளவரசர் நவாப் முகம்மது அப்துல் அலி பங்கேற்று பேசியதாவது:

நமது அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கட்டமைப்பாக விளங்கும் மதச்சார்பின்மையை எந்தவிதத்திலும் விட்டுக் கொடுக்கக் கூடாது. இன்று சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இது நாட்டில் அமைதி நீடித்து நிலவுவதற்கான ஒரு நல்ல அடையாளமாக திகழவில்லை. நாட்டில் உள்ள சட்டங்கள் மத ஒற்றுமையை சீர்குலைப்பது, மதங்களுக்கு இடையே பகையை

வளர்ப்பது மற்றும் தேர்தலுக்காக மதங்களை தவறாக பயன்படுத் துவது ஆகியவற்றை தடுக்கின் றன. மனிதன் உயிர்வாழ ஆக்ஸிஜன் எவ்வளவு முக்கியமோ அதுபோல, மதச்சார்பின்மை என்பது இந்தியாவுக்கு முக்கியம். இவ்வாறு ஆற்காடு இளவரசர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி, தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா உள்ளிட்டோர் உரையாற்றினர்.

SCROLL FOR NEXT