தமிழகம்

அணை கட்டுவதை தடுக்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

கர்நாடக மாநிலம், மேகேதாட்டு வில் அந்த மாநில அரசு புதிய அணை கட்ட முயற்சிப்பதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங் களவை உறுப்பினர் டி.கே.ரங்க ராஜன் தெரிவித்தார்.

கோவையில் செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: கர்நாடக அரசின் இந்த நடவடிக் கையால் தமிழகத்தில் 14 லட்சம் ஏக்கர் விவசாய சாகுபடி பாதிக் கும்.

புதிய அணை கட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடியிடம் கடந்த மாதம் மனு அளித்தபோதும், மத்திய அரசு மவுனமாக இருந்து வருகிறது.

கர்நாடகம் - தமிழகம் மட்டுமல்லாது, மாநிலங்களுக்கு இடையே உள்ள நீர்ப் பங்கீடு பிரச்சினையைத் தீர்க்க மத்திய அரசு உடனடியாக கூட்டத்தைக் கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பிரச்சினையில் காலதாமதம் செய்யாமல், அந்த மாநில அரசை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, தடுக்க வேண்டும். மேலும் முழு அடைப்புப் போராட்டத்தில் சி.ஐ.டி.யு உள்ளிட்ட அனைத்து தொழிற் சங்கங்களும் பங்கேற்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

          
SCROLL FOR NEXT