தமிழகம்

டெலிமெடிசின் சேவையை அறிமுகப்படுத்துகிறது கோவை ஹோலிஸ்டிக் ஹெல்த் கேர்: அமெரிக்க நிறுவனத்துடன் கைகோர்ப்பு

செய்திப்பிரிவு

கோவையைச் சேர்ந்த ஹோலிஸ்டிக் ஹெல்த் கேர் ஃபவுண்டேஷன், அமெரிக் காவைச் சேர்ந்த அமெரிக் கன் டெலிமெடிசின் அசோசி யேஷன் ஆகியவை இணைந்து டெலிமெடிசின் சேவையை தொடங்க உள்ளன.

நோயாளிகளின் நோயை அறிவது, ஆலோசனை வழங்கு வது, மருத்துவம் பார்ப்பது, சுகாதார காப்பீடு உள்ளிட்ட பணிகளை ஹோலிஸ்டிக் ஹெல்த் நிறுவனம் செய்து வருகிறது. நோயாளிகளை தொடர்ந்து கண்காணித்து பராமரிக்க டெலிமெடிசின் முறை பயன்படும். நோயாளிகள் குறித்த தகவல்களை மின்னணு முறையில் கணினியில் பதிவு செய்து டெலிமெடிசின் முறை மூலம் பராமரிப்பது சுலபம். எப்போது வேண்டுமானாலும் குறிப்பிட்ட நோயாளி குறித்த அனைத்து தகவல்களையும் உலகின் எந்த மூலையில் இருப்பவரும் தெரிந்துகொள்ள முடியும். நோயாளி குறித்த முழுமையான தகவல்கள் இருப்பதால் காப்பீடு நிறுவனங் களை தவறாக பயன்படுத்துவது குறையும்.

எனவே இங்கு டெலிமெடி சின் சேவையையும் மேற் கொள்ள ஹோலிஸ்டிக் ஹெல்த் நிறுவனம் திட்டமிட் டது. இதற்காக அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள அமெரிக்கன் டெலிமெடிசின் அசோசியேஷனுடன் கைகோர்த்துள்ளது.

வாஷிங்டனில் நடைபெற்ற இதற்கான கூட்டத்தில் ஹோலிஸ்டிக் ஹெல்த் கேர் நிறுவனர் மற்றும் இயக்குநர் தர் ரமணி, இயக்குநர் சூரியநாராயணன், அமெரிக் கன் டெலிமெடிசின் அசோசியே ஷன் தலைமைச் செயல் அதி காரி ஜோனத்தன் டி.லிங்கோஸ், சிங்கப்பூரைச் சேர்ந்த எவ ரெஸ்ட் லிங்க்ஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி முத்தையா, நியூசிலாந்தைச் சேர்ந்த சர்வதேச ஒத்துழைப்பு மேம்பாடு இயக்குநர் டொமினிக் டிசில்வா கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது இரு நிறுவனங் களும் இணைந்து பணியாற்றி மருத்துவ சேவையில் மகத் தான மாற்றத்தை கொண்டு வர ஒப்புக்கொண்டுள்ளன.

வாஷிங்டனில் நடைபெற்ற இதற்கான கூட்டத்தில் ஹோலிஸ்டிக் ஹெல்த் கேர் நிறுவனர் மற்றும் இயக்குநர் ஸ்ரீதர் ரமணி, இயக்குநர் சூரியநாராயணன், அமெரிக் கன் டெலிமெடிசின் அசோசியே ஷன் தலைமைச் செயல் அதி காரி ஜோனத்தன் டி.லிங்கோஸ், சிங்கப்பூரைச் சேர்ந்த எவ ரெஸ்ட் லிங்க்ஸ் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி முத்தையா, நியூசிலாந்தைச் சேர்ந்த சர்வதேச ஒத்துழைப்பு மேம்பாடு இயக்குநர் டொமினிக் டிசில்வா கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது இரு நிறுவனங் களும் இணைந்து பணியாற்றி மருத்துவ சேவையில் மகத் தான மாற்றத்தை கொண்டு வர ஒப்புக்கொண்டுள்ளன.

SCROLL FOR NEXT