ரெப்கோ வங்கியின் செயல்பாடு களுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு பாராட்டு தெரிவித்தார்.
சென்னை தி.நகரில் உள்ள ரெப்கோ வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்றுமுன்தினம் வந்து நிர்வாகக் குழு உறுப்பினர் களைச் சந்தித்தார். அப்போது ரெப்கோ வங்கி மற்றும் அதன் துணை நிறுவனங்களான ரெப்கோ வீட்டு வசதி நிறுவனம், ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ், தாயகம் திரும்பியோருக்கான நலத்திட்டங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
2005-ம் ஆண்டில் ரூ.1,032 கோடியாக இருந்த வங்கியின் வர்த்தகம், தற்போது ரூ.11,000 கோடியை தாண்டியுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் 11 மடங்கு வளர்ச்சியாகும். மேலும் வங்கி 100-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் நிகர வாராக்கடன் எதுவும் இல்லாமல் இயங்கி வருகிறது.
வர்த்தக முன்னேற்றம், லாப மீட்டும் திறன், தாயகம் திரும்பி யோர் நலன் மற்றும் வீட்டு வசதி ஆகிய பிரிவுகளில் வங்கி யின் செயல்பாடுகளை அமைச் சர் பாராட்டினார் வங்கியின் முன்னேற்றத்துக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று உறுதியளித்தார்.
இவ்வாறு வங்கி வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.