கோவிலம்பாக்கத்தில் போலீஸ் என்று கூறி வாகன சோதனை நடத்தி பணம் வசூலித்த இளைஞர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை கோவிலம்பாக்கம் பஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவில் 3 பேர் தங்களை போலீஸ் என்று கூறிக்கொண்டு, அந்த வழியாகச் சென்ற இரு சக்கர வாகனங்களை வழிமறித்து ஆவணங்களை காட்டுமாறு மிரட்டி, பலரிடம் பணம் பறித்தனர். இதுகுறித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. விரைந்து வந்த போலீஸார் வாகனங்களை சோதனை செய்வதுபோல நடித்துக் கொண்டிருந்த 3 பேரையும் பிடித்து காவல் நிலை யத்துக்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையில் அவர்கள் நன்மங் கலம் கோயில் நகர் பகுதியை சேர்ந்த முகேஷ்கண்ணா(21), மயிலேரும் பிள்ளை(20), தினேஷ்குமார்(24) என்பது தெரிந்தது. மூவரும் போதையில் இருந் துள்ளனர். மேலும், மது குடிப்பதற்கு பணம் இல்லாததால் போலீஸ் எனக் கூறி சோதனை செய்வதுபோல நடித்து பணம் வசூல் செய்தது தெரிந்தது. 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.