தமிழகம்

வேளாண் அதிகாரி தற்கொலையில் சிபிஐ விசாரணை: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

வேளாண்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் தொடர் நிர்ப்பந்தத்தால்தான் வேளாண் துறை உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார் என அத்துறையைச் சார்ந்த தொழிலாளர்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.

முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தற்கொலைக்கு தூண்டு தலாக இருந்த அக்ரி கிருஷ்ண மூர்த்தி மீது வழக்கு பதிவுசெய்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT