தமிழகம்

வடசென்னை அனல்மின் நிலையம் கருத்துகேட்பு கூட்டத்தில் புகார்

செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டம், எண்ணூரில் உள்ள வடசென்னை அனல் மின்நிலைய வளாகத்தில் 3-வது அலகு அமைப்பது தொடர்பாக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தலைமையில் நேற்று நடந்தது.

இக்கூட்டத்தில், மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் ராஜன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அதிகாரிகள், எண்ணூர், புழுதிவாக்கம், மீஞ் சூர், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மீனவ சங்கங்கள் உள்ளிட்ட பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், ’வட சென்னை அனல் மின் நிலைய 3-வது அலகு அமைவிடத்தை சுற்றியுள்ள பகுதியிலிருந்து வெளி யேறும் கழிவுநீரால் கடலின் மீன் வளம் பாதிக்கப்படுகிறது. மேலும், இந்த 3-வது அலகு வந்தால் மீன் வளம் முழுமையாக பாதிக்கப்பட்டு, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்’ என பொதுமக்கள் மற்றும் பொதுநல அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், ’பொதுநல அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்து கள் யாவும் மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு அனுப்பி வைக்கப்படும்’ எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT