காப்பீட்டுத்துறை ஊழியர்கள் நாடு தழுவிய அளவில் நடத்தவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவாக மாவட்டத் தலைநகரங்களில் சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்கும் காப்பீட்டுச் சட்ட மசோதாவை நிறைவேற்ற மக்களவையில் அறிமுகம் செய்துள்ள மத்திய அரசின் போக்கைக் கண்டித்து வரும் மார்ச் 9-ல் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை காப்பீட்டுத் துறை ஊழியர்கள் செய்ய உள்ளனர்.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக சிஐடியு சார்பாக மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்த சிஐடியு மாநிலக்குழு முடி வெடுத்துள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.