தமிழகம்

தமிழகம் முழுவதும் நடப்பாண்டில் மட்டும் 34 லட்சம் டன் நெல் கொள்முதல்

கடந்த ஆண்டைவிட 11 லட்சம் டன் உற்பத்தி அதிகரிப்பு

செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: தமிழகத்​தில் நடப்​பாண்​டில் மட்டும் 34.50 லட்​சம் டன் நெல் கொள்​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது என தமிழ்​நாடு நுகர்​பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்​குநர் ஆ.அண்​ணாதுரை தெரி​வித்​துள்ளார்.

தஞ்​சாவூர் மாவட்​டத்​தில் திரு​வை​யாறு உள்​ளிட்ட பல்​வேறு இடங்​களில் உள்ள நெல் கொள்​முதல் நிலை​யங்​களை நேற்று ஆய்வு அவர் செய்தார்.

          

பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறியதாவது: தமிழகத்​தில் நடப்பு நெல் கொள்​முதல் பரு​வம் கடந்த செப்​டம்​பரில் தொடங்​கியது. தொடர்ந்​து, இந்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி வரை 3,496 நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்கள் திறக்​கப்​பட்டு 34.50 லட்சம் டன் கொள்முதல் செய்​யப்​பட்​டுள்​ளது.

4 லட்​சத்து 2,971 விவ​சா​யிகளுக்கு ரூ.8,716 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்​ளது. கடந்த ஆண்டு இதே நாள் வரை 23.56 லட்​சம் டன் நெல் கொள்​முதல் செய்​யப்​பட்​டது குறிப்பிடத்தக்கது. இதன்​மூலம் கடந்த ஆண்​டை​விட 11 லட்​சம் டன் அதி​க​மாக நெல் கொள்​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது.

நடப்​பாண்​டில் கொள்​முதல் செய்​யப்​பட்ட நெல்​லில் இது​வரை 29.38 லட்​சம் டன் நகர்வு செய்​யப்​பட்​டு​விட்​டது. மீத​முள்ள 5 லட்​சத்து 11,996 டன் நெல் நாள்தோறும் 40,000 டன் முதல் 45,000 டன் வரை நகர்வு செய்​யப்​பட்டு வரு​கிறது.

ரயில் மூலம் கடந்த அக்​டோபர் முதல் மார்ச் 8-ம் தேதி வரை டெல்டா மாவட்​டங்​களில் இருந்து 7.31 லட்​சம் டன் நெல் நகர்வு செய்​யப்​பட்​டுள்ளது.

டெல்டா மாவட்​டங்​களில் நெல் கொள்​முதலுக்​காக 1 கோடியே 42 லட்​சத்து 11,279 சாக்​கு​கள், 303.958 டன் சணல்​கள், 27,610 பிளாஸ்​டிக் தார்ப்​பாய்​கள் இருப்​பில் உள்​ளன. மாநில அளவில் 3.03 கோடி சாக்​கு​கள் இருப்​பில் உள்​ளன.

மேலும், 2022-ம் ஆண்டு முதல் கடந்த ஜன.15 வரை, 18 மாவட்​டங்​களில் 54 இடங்​களில் 7.33 லட்​சம் டன் கொள்​ளளவு கொண்ட மேற்​கூரை​யுடன் கூடிய 383 நவீன நெல் சேமிப்​புத் தளங்​களை ரூ.825.79 கோடி மதிப்​பில் கட்​டு​வதற்கு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டு, அவற்​றில் ரூ.331.08 கோடி மதிப்​பில் 4.03 லட்​சம் டன் கொள்​ளளவு கொண்ட 253 சேமிப்​புத்தளங்​கள் புதிதாகக் கட்​டப்​பட்​டு, தமிழக முதல்​வ​ரால் பயன்​பாட்​டுக்கு திறந்​து​வைக்​கப்​பட்​டுள்​ளன.

நடப்பு சம்​பா, தாளடி பரு​வத்​தில் 1 லட்​சத்து 30,960 ஹெக்​டேரில் நெல் பயி​ரிடப்​பட்​டு, தற்​போது வரை 1 லட்​சத்து 6,047 ஹெக்​டேரில் (81 சதவீதம்) அறு​வடை நிறைவடைந்​துள்​ளது. மீதமுள்ள பகு​தி​களில் அறு​வடை பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

SCROLL FOR NEXT