தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டு களில் ரூ.31 ஆயிரத்து 706 கோடி அளவுக்கு முதலீடுகளுக்கான 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து, பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: தொழில் முத லீடுகளை ஈர்ப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பலனாக கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.31 ஆயிரத்து 706 கோடி முதலீடு செய் வதற்கான 33 புரிந்துணர்வு ஒப்பந் தங்களை தமிழக அரசு மேற் கொண்டுள்ளது. மேலும், ஒற்றைச்சாளர ஒப்புதல் முறை மூலம், 42 திட்டங்களில் ரூ.9 ஆயிரத்து 379 கோடி அளவுக்கு கூடுதல் முதலீடுகள் ஈர்க்கப் பட்டுள்ளன. இதைத் தவிர, ரூ.17 ஆயிரத்து 134 கோடி மதிப்பீட்டில் ஏழு முதலீட்டுத் திட்டங்கள் இறுதி செய்யப்பட்டு இவற்றுக்கான புரிந் துணர்வு ஒப்பந்தங்கள் விரைவில் கையெழுத்திடப்பட உள்ளன.
மேலும் 2015-ம் ஆண்டு மே மாதம் 23, 24-ம் தேதிகளில் சென் னையில் சர்வதேச முதலீட் டாளர்கள் மாநாடு நடத்தப் பட உள்ளது. அதிக வேலை வாய்ப்புகள், அனைத்துப் பகுதி களிலும் சமச்சீரான வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் வளர்ச்சி போன்ற தொலைநோக்குத் திட்ட இலக்கு களை விரைவான தொழில் மயமாதல் மூலமாக எட்டிட இம்மாநாடு வழிவகுக்கும். இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப் பட்டுள்ளது.