சென்னையில் உள்ள பல்வேறு அஞ்சல் அலுவலகங்களில் கடந்த இரண்டு நாட்களில் 40,000 சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டுள்ளன என்று “இந்திய போஸ்ட்” அறிவித்துள்ளது.
கடந்த 10-ஆம் தேதி சேமிப்பு வங்கி தினமும் 11-ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.
இந்த விழாக்களின்போது இந்த சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டதாக தலைமை அஞ்சல் அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர்களை கௌரவிக்கும் நோக்கத்தோடு குலுக்கல் முறையில் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு “மை ஸ்டாம்ப்” விருது பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.