தமிழகம்

கல்லூரி மாணவி கொலை இளைஞர் தலைமறைவு: ஒருதலைக் காதலால் விபரீதம்

செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள பெருவிடைமருதூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன். அப்பகுதி யில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஜெயக்குமார் (28). வெளிநாட்டில் வேலைபார்த்து வந்த இவர், கடந்த 4 நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்துள் ளார். இவர்களின் உறவினர் மகள் விக்டோரியா (18). இவரது தந்தை ரங்கசாமி வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

மன்னார்குடியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் முதலா மாண்டு படித்து வந்த விக்டோரி யாவை, ஒருதலையாகக் காதலித் துள்ளார் ஜெயக்குமார். ஆனால், விக்டோரியா இவரது காதலை ஏற்றுக்கொள்ளவில்லையாம்.

இந்நிலையில், நேற்று மாலை கல்லூரியிலிருந்து வீட்டுக் குத் திரும்பிக் கொண்டிருந்த விக்டோரியாவை வழிமறித்த ஜெயக்குமார், அவருடன் தக ராறில் ஈடுபட்டுள்ளார். திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விக்டோரியாவின் கழுத்தை அறுத்துவிட்டு, அங்கி ருந்து ஜெயக்குமார் தப்பியோடி னார். இதில், பலத்த காய மடைந்த விக்டோரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த பெருக வாழ்ந்தான் போலீஸார் விக்டோரி யாவின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

SCROLL FOR NEXT