தமிழகம்

குளோபல் ஹெல்த் சிட்டி நடத்தும் சர்வதேச மாநாடு: சென்னையில் 25-ம் தேதி தொடங்குகிறது

செய்திப்பிரிவு

அவசரகால மருத்துவ உதவி பற்றிய சர்வதேச மாநாடு சென்னையில் 25-ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியா உட்பட 19 நாடுகளின் அவசர கால மருத்துவ நிபுணர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டுக்கு குளோபல் ஹெல்த் சிட்டி ஏற்பாடு செய்துள்ளது.

அவசர காலங்களில் முதலுதவி தரப்பட வேண்டிய “பொன்னான நேரம்” என்றழைக்கப்படும் முதல் ஒரு மணி நேரத்தில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட வேண்டும் என்று இந்த மாநாட் டில் விவாதிக்கப்பட உள்ளது.

இநத மாநாட்டில் இந்தியா விலிருந்து 600 மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கவுள்ளனர். சென்னையிலிருந்து ராமச்சந்திரா மற்றும் அப்போலா மருத்துவ மனைகளின் நிபுணர்கள் கலந்து கொள்கின்றனர். ரஷ்யா, ஜெர் மனி, ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து உள் ளிட்ட 18 நாடுகளிலிருந்து மருத்து வர்கள் கலந்துகொண்டு விவாதிக்க உள்ளனர்.

இது குறித்து இந்த மாநாட்டின் ஒருங்கிணைப்பு செயலாளர் மருத்துவர் சார் சுரேந்தர் வியாழக் கிழமை நிருபர்களிடம் கூறியதாவது: அவசரகால உதவி என்றால் விபத்துகளின் போது மட்டுமே பொருந்தும் என்று பொது மக்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

‑ஆனால் இருதய வலி கொண்டவரையும் வாத நோய் ஏற்பட்டவரையும் முதல் ஒரு மணி நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்தால் அவரை காப்பாற்ற கண்டிப்பாக முடியும். அதே போல் விபத்து காலங்களில் ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருப்பதை விட, ரத்த போக்கை நிறுத்துவது போன்ற முதலுதவி செய்து மருத்துவ மனைக்கு கொண்டு வந்தால் அவரை காப்பாற்றும் வாய்ப்பு அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT