அம்பேத்கர் சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்யும் விவகாரத்தில் தலையிட்டு தமிழக அரசின் முடிவை திரும்பப் பெற வைக்க வேண்டும் என்று ஆளுநர் ரோசய்யாவிடம் திமுக மாணவரணி மனு அளித் துள்ளது.
தமிழக ஆளுநர் ரோசய்யா விடம் திமுக மாணவரணிச் செயலாளர் கடலூர் இள.புகழேந்தி அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வரும் சட்டக் கல்லூரியை திருவள்ளூருக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவு மாணவர்களுக்கு எதிரானதாகவுள்ளது. இதனால் மாணவிகளின் பாதுகாப்பும் கேள்விக் குறியாகியுள்ளது.
இதனால் மாணவர்களும், மாணவிகளும் தீவிர போராட் டத்தை மேற்கொண்டு வருகின் றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறை அதிகாரிகள் கண்மூடித் தனமாக தாக்கியுள்ளனர்.
மாணவர்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையும் சுமூகத்தீர்வை எட்டவில்லை. எனவே, இந்த பிரச்சினையில் நீங்கள் தலையிட்டு தமிழக அரசின் முடிவை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாணவர்களை தாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.