தமிழகம்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்

செய்திப்பிரிவு

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது.

இலங்கையில் மகிந்த ராஜபக்ச ஆட்சி பதவியை இழந்து மைத்ரிபால சிறிசேனா தலைமையில் புதிய ஆட்சி அமைந்த பிறகு முதன் முறையாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது.

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையின் தாக்குதலில் ஒரு ஜிபிஎஸ் கருவி, மீன்கள் இருப்பைக் கண்டறியும் கருவி ஆகியன சேதப்படுத்தப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT